அஜீத் கொடுத்த ஐடியா ! துணை முதல்வர் பாராட்டு!!

0
66

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் தக் ஷா குழுவுக்கும், குழுவை வழிநடத்தும் நடிகர் அஜித்துக்கும், கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண்   வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தக்‌ ஷா குழு:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளில்லாத விமானத்தை தயாரித்து நடிகர் அஜித்தின் தக் ஷா மாணவர் குழு 2018ஆம் ஆண்டு சாதனை படைத்தது. மேலும்  அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறந்த ஆளில்லா விமானம் தயாரிக்கும்  போட்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அஜித்தை ஆலோசகராக கொண்ட தக் ஷா மாணவர் குழுவினர் வெற்றி பெற்றனர். வெற்றிக்கான காரணம் குழுவினர் கண்டுபிடித்த விமானம் தொடர்ந்து 6 மணி நேரம் 7 நிமிடம் வானில் பறந்து சாதனை படைத்ததுதான். இதில் பெட்ரோல் மின்சாரமாக மாறி விமானத்தை அதிக நேரம் விண்ணில்பறக்க வைக்கிறது. மேலும் இந்த விமானத்தை கம்ப்யூட்டர் மூலம் இயக்கும் வசதியை கண்டுபிடித்துள்ளனர். இதனால் எந்த இடத்தில் எவ்வளவு உயரம் பறக்க வேண்டும் என்பதை கூட தெளிவாக அளவிட்டு விமானத்தின் வேகத்தையும், அதன் கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்த முடியும் .

கொரோனா தொற்றுக்கு உதவி:

சென்னையின் முக்கிய இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான சோதனை ஓட்டத்தில் தக் ஷா குழுவினர் செயல்பட்டு அந்த சோதனை முயற்சி பலன் அளித்தது.

தக்‌ஷா’குழுவினர் தமிழக அரசுடன் இணைந்து ட்ரோன் மூலம் சென்னையில் கிருமி நாசினிகளை தெளித்து வந்தது. இதனிடையே ட்ரோன்களின் திறனை அதிகரிக்க முடிவு செய்த தக்‌ஷா குழு அதற்காக பல்வேறு மாற்றங்களை ட்ரோன்களில் செய்துள்ளனர். அதன்படி 16 லிட்டர் அளவிற்கு கிருமி நாசினிகளை சுமந்து செல்லும் வகையில் தக்‌ஷா குழுவினர் மேம்படுத்தினர். இதன் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் 30 விநாடிகளில் கிருமி நாசினி தெளிக்க முடியும் என்பதால் சிவப்பு மண்டலங்களில் ஆளில்லா இந்த ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது இன்றளவும்.

நடிகர் அஜீத் பங்களிப்பு :

சென்னையில் கொரோனா ஒழிப்பு பணிக்கு, ட்ரோன் கேமரா மூலம் கிருமி நாசின தெளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சிவப்பு மண்டல பகுதிகளில் இப்பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனை, டாக்டர் கார்த்திக் நாயாணன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

மேலும், இப்பணியில் அஜித் நிறைய பங்காற்றியுள்ளார் எனவும்  கொரோனா தடுப்பு பணியில் நடிகர் அஜித்தின் இந்த புதுவித யோசனை முக்கிய பங்கு வகிப்பதாக இவர் அந்த பேட்டியில் தெரிவித்திருப்பதையடுத்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #AJITHLedDroneToFightCorona என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து  வருகின்றனர்.

-மணிகண்டன்

மக்கள் ஊடக மையம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here