அதிமுக.,வின் முதலமைச்சர் வேட்பாளர் ; அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
18

அதிமுக.,வின் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய தமிழக முதலமைச்சர் பழனிசாமியை தேர்ந்தெடுத்து அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அ.தி.மு.க.,வில், முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே போட்டி எழுந்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது, அக்.,07 அறிவிக்கப்படும் என, அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆதரவு எம்எல்ஏ.,க்களுடனும் தனித்தனி அணியாக உருவாகி ஆலோசனை நடத்தினர். மேலும், அமைச்சர்களும் இருவருடனும் மாறி மாறி ஆலோசனை நடத்தியதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
வழிகாட்டுதல் குழு
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக.,வின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்தார்.
வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்பி வேலுமணி, ஜெயக்குமார், சி.பி.சண்முகம், ஆர்.காமராஜ், மற்றும் ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்பி., கோபால கிருஷ்ணன், மாணிக்கம் (சோழவந்தான் எம்எல்ஏ), முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக பழனிசாமி அறிவித்தார்.
முதலமைச்சர் வேட்பாளர்
பின்னர் பேசிய பன்னீர்செல்வம், முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், பழனிசாமி தான் வரக்கூடிய தமிழக சட்டசபைக்கான அதிமுக.,வின் முதலமைச்சர் வேட்பாளர் என அக்கட்சியின் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமிக்கு, பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here