அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை மரணம் !!!

0
146

”விண்ணில் பாய்ந்த விமானம் ஒன்று மண்ணில் மறைந்தது.”

அமெரிக்காவின் விண்வெளித்  துறை வரலாற்றில் முதல் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட ஜெர்ரி காப் மரணம் அடைந்தார்.

கடந்த 1961ம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளித்  துறை ஆராய்ச்சிக் கூடமான நாசாவின்  ஜெர்ரி காப்  என்ற பெண்.  அந்நாட்டின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.

 இவர் ஆரம்ப காலத்தில் ஆண்களுக்கு போர் விமானங்களை  ஓட்டக்  கற்றுத்தரும் பயிற்சியாளராக பணியாற்றினார்.  பின்னர் ஜெர்ரி காப்புடன்  சேர்ந்த மொத்தம் 13 பெண்கள் விண்வெளி துறை ஆராய்ச்சிக்கான உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றார்கள்.

எனினும் பயிற்சிக்கு பின்னர் , விண்வெளிப்  பயணத்தில் ஜெர்ரி காப்புக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.  இதனால் அனைத்து துறைகளிலும் ஆணாதிக்கத்திற்கு  எதிராக,  பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஜெர்ரி குரல் எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து வட அமெரிக்காவில் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில்,  உணவுப்  பொருட்கள் மற்றும் மருந்துகளைக்  கொண்டு  சேர்க்கும்  விமானியாக  சுமார்  30 ஆண்டுகாலம் ஜெர்ரி காப் பணியற்றினார்.  அப்போது குறுகிய நேரத்தில் விமானங்கள் சென்று சேரும் வகையில் புதிய வழித்தடங்களைக்  கண்டுபிடித்து  பலரை ஆச்சரியத்தில் உள்ளக்கினார்.  இதற்காக இவரது பெயர் நோபல் பரிசுக்கு  பரிந்துரைக்கப்பட்டது.

விண்வெளக்கு சுனிதா வில்லியம்ஸ் உள்பட சில பெண்களும் சென்று சாதிக்க காரணமாக அமைந்தார். ஜெர்ரி காப்

 விண்ணைத் தாண்டிச் சென்று,  மண்ணில் மறைந்தாலும் எங்கள் மனதில் என்றும் வாழும் உன் சாதனைகள் ஜெர்ரி காப்!!

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here