அமெரிக்காவின் வசந்த காலம்!!

0
714

அமெரிக்காவில் எல்லாம் இப்போது குளிர் காலத்துக்கு விடைகொடுத்து வசந்த காலம் வந்தாச்சு . அதற்கு ஏற்ற மாதிரி அங்கு கொண்டாட்டங்களும் அதிகரித்து வருகிறது. அப்படியான ஒரு சூப்பர் கொண்டாட்டம் தலைநகரில் நடக்கிறது. அந்த சூப்பர் கொண்டாட்டத்தை தான் இன்று பார்க்கப் போகிறோம்.

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் ஒவ்வொரு வருடமும் வசந்த காலத்தில் செர்ரி பிளாசம் அதாங்க செர்ரி பூ திருவிழா இரண்டு வாரம் பெரிதாக வெகு கோலாகலமாக கொண்டாடுகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இருந்து தலைநகருக்கு ஏப்ரல் முதல் இரண்டு வாரமும் மக்கள் படையெடுக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்களாம். அப்போ எவ்வளவு விசேஷம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

மரம் முழுக்க பூக்கள்:

எல்லாப் பக்கமும் பிங்க், அதுவும் பேபி பிங்க் நிறத்தில் பூக்கள். இலை கொண்ட மரத்தில் பூக்கள் பார்த்தாலே அழகு தான். அதிலும் இலைகள் இல்லாமல் மரம் முழுக்க பூக்கள் இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் ஒன்றல்ல கிட்டதட்ட மூவாயிரம் மரங்கள் அது முழுக்க முழுக்க பூக்கள்.

நடுவில் முழுவதும் தண்ணி அதை சுற்றி மரங்கள் அப்படியே சுற்றி ஒரு நடை போட்டால் எப்படி இருக்கும். அந்த இடம் தான் டைடல் பேசின். அங்கு வரிசையாக மறைந்த அதிபர் லிங்கன் தொடங்கி பலரின் நினைவிடங்கள் அமைந்திருக்கிறது .

இந்த செர்ரி ப்லோஸ்ஸோம் விழா மார்ச் 30 தொடங்கி இரண்டு வாரங்கள் மட்டும் தான். இரண்டு வாரத்திற்கு மேல் இந்த அழகிய பிங்க் எல்லாம் உதிர்ந்து இலைகள் முளைத்து விடும். அதனால நீங்க அமெரிக்காவில் இருந்தா அடுத்த ஆண்டு மறக்காமல் சென்று செர்ரி ப்லோஸ்ஸோம் விழாவை மறக்கமால் குடும்பத்துடன் சென்று மகிழுங்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here