அமெரிக்காவில் தமிழர் சேதுராமன் பஞ்சநாதன் சாதனை!!

0
48

அரசியல், ராணுவம் தொடங்கி அறிவியல் – தொழில்நுட்பம் வரை எண்ணற்ற வடிவங்களில் அசைக்க முடியாத வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இது அமெரிக்க மக்கள் தொகையில் வெறும் 0.3 சதவீதம் மட்டுமே.

ஆனால், சுந்தர் பிச்சை, இந்திரா நூயி, கமலா ஹாரிஸ், மெய்யா மெய்யப்பன், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எண்ணற்ற அமெரிக்க தமிழர்கள் அந்த நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை விளக்க வேண்டிய அவசியமில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமெரிக்க அரசின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளில் ஒன்றான தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக சமீபத்தில் பதவியேற்றுள்ளார் தமிழரான சேதுராமன் பஞ்சநாதன். அமெரிக்காவின் அறிவியல் – தொழில்நுட்ப துறையில் வியத்தகு தாக்கத்தை செலுத்தக்கூடிய இந்த அமைப்பின் இயக்குநராக தமிழர் ஒருவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்த சேதுராமன் பஞ்சநாதன், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவால் 2014ஆம் ஆண்டு தேசிய அறிவியல் வாரியத்தின் (National Science Board) உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது டொனால்டு டிரம்பின் ஆதரவுடன் தேசிய அறிவியல் கழகத்தின் (National Science Foundation) இயக்குநராக நியமிக்கப்பட்டதன் மூலம் வரலாறு படைத்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு மத்தியில் ஒரு வெளிநாட்டு அரசின் மிக உயர்ந்த பதவியை அடைந்தவர்களின் பட்டியலில் சேதுராமனும் இணைந்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here