அமெரிக்க விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நன்றாக செயல்படுகிறது – ‘நாசா’

0
106

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விண்கலம் நன்றாக செயல்படுகிறது என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா‘ அண்மையில் ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. விண்கலத்தின் செயல்பாடுகளை தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ‘நாசா‘ ஆய்வுக்கூடத்தில் இருந்தபடி விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தார்கள்.
இந்நிலையில், விண்கலம் ஆரோக்கியமாக இருப்பதாகவும், கட்டளை பிறப்பிக்க முடிவதாகவும், விண்கல தகவல்களை பெற முடிவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில், சில தொழில்நுட்ப சிக்கல்களை விண்கலம் சந்தித்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here