அய்யய்யோ அணுகுண்டு!

0
549

1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது, அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை வீசியபோது, அந்நகரங்கள் மட்டுமல்ல, உலகமே அதிர்ந்தது!

அந்த அணுகுண்டுகளின் அதிர்வலைகளால் தீப்பற்றி 5 லட்சத்திற்கு

மேற்பட்ட கட்டடங்களும், கார்களும் எரிந்தன. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்தன. கர்ப்பிணிகளின் கருப்பையைத் தாக்கி, பிறக்கும் குழந்தைகளை ஊனப்படுத்தின. அணுகுண்டுகள் ஏற்படுத்தும் இத்தகைய ஆபத்துகளால் அச்சமடைந்த உலக நாடுகள், அணுகுண்டு தயாரிப்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

எனினும் 1953 ஆம் ஆண்டு அமெரிக்கா, முந்தையவற்றை விட சக்தி வாய்ந்த அணுகுண்டு ஒன்றைத் தயாரித்து நெவேதா பகுதியில் பரீட்சித்துப் பார்த்த வீடியோ காட்சிகள் அண்மையில் வெளியாகியுள்ளன.

முந்தைய அணுகுண்டுகள், வெடித்த பிறகு ஏற்படுத்தும் அதிர்வலைகளால் ஆபத்தை ஏற்படுத்தின என்றால், 15 கிலோடன் சக்திகொண்ட இந்த அணுகுண்டு, வெடிக்கும் போது ஏற்படுத்தும் வெப்ப ஆலைகளாலேயே ஆபத்தை அளிப்பதாக இருக்கிறது.

ஆம் 1953 ஆம் ஆண்டு வெடிக்கப்பட்ட அந்த அணுகுண்டு ஏற்படுத்திய வெப்ப அலைகளால், அங்கே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள்,1 பேருந்து மற்றும் 1 சிறு கட்டடம் ஆகியவற்றின் மீது பூசப்பட்டிருந்த வண்ணக்கலவை உருகி, அருவியெனக் கொட்டும் காட்சி, கண்களில் வெப்ப அலைகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

  1. இந்தியாவின் தற்போதைய முக்கியப் பிரச்சனையாக வேலையில்லாத் திண்டாட்டம் திகழ்கிறது. என CII எனப்படும் இந்திய தொழிற்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
  2. பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினரின் பயிற்சி மையங்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதல் எதிர்பார்த்த பலனை அளித்துள்ளதாக  இந்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here