இடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…?

0
68

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அதிபர்கள் என கொரோன அனைவரையும் தாக்கி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக அங்கு கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது, பொலிவியா நாட்டு இடைக்கால அதிபர் ஜினைன் அனேஸ்- க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறித்து அனேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், நலமுடன் இருப்பதாகவும், தனது பணிகளை தனிமைப்படுத்திக் கொண்டபடியே தொடர இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் முன்னாள் அதிபர் ஏவா மொராலஸ் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, அந்நாட்டு செனட் அவையின் எதிர்க்கட்சி பெண் உறுப்பினர் ஜினைன் அனேஸ் தன்னைதானே இடைக்கால அதிபராக அறிவித்துள்ளார்.

மொராலஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமர்வில் இருந்து வெளியேறியிருந்தனர். எனவே, இடைக்கால அதிபராக இந்த பெண் செனட்டரை அங்கீகரிப்பதற்கு போதிய உறுப்பினர்கள் அவையில் இல்லை.

ஆனால், அரசமைப்புச் சட்டப்படி, அதிகார வரிசையில் அடுத்தபடியாக தான் இருப்பதாக கூறியுள்ள ஜினைன் அனேஸ், விரைவில் தேர்தல் நடத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

“ஆட்சிக்கவிழ்ப்பில் ஆர்வம் கொண்ட வலதுசாரி செனட்டர்” என்று ஜினைன் அனேஸை குறிப்பிட்டுள்ள மொராலஸ், அனேஸின் இந்த அறிவிப்பிற்கு கண்டனமும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிவியாவின் அதிபராக பதவியேற்ற முதலாவது மண்ணின் மைந்தரான மொராலஸ் பதவி விலக வேண்டுமென அந்நாட்டின் படைத்தலைவர் வெளிப்படையாக அறிவித்த பின்னர், அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக மோராலஸ் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து செனட் அவையின் கட்டுப்பாட்டை தற்காலிகமாக பெற்ற ஜினைன் அனேஸ் அதிபருக்கு அடுத்து அதிகாரம் பெற்ற வரிசையில் இடம்பெற்றார்.

பலர் பதவி விலகியதை தொடர்ந்து, முன்னாள் செனட் அவையின் துணைத் தலைவரான இவர், இந்த அதிகாரத்தை பெற்றார்.

மொராலசின் சோசலிச இயக்க கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வில் இல்லாத நிலையில், ஜினைன் அனேஸ் தன்னைதானே இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார்.

“வரலாற்றில் மிக சூழ்ச்சியான, மோசமான, ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டம்” என்று இதனை மொராலஸ் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கோக்கோ விவசாயியான மோராலஸ் 2006ம் ஆண்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வறுமை ஒழிப்பு, பொலிவியாவின் பொருளாதார மேம்பாடு போன்ற செயல்பாடுகளால் இவர் பெரும் புகழ்பெற்றார்.

ஆனால், அரசியல் சாசன விதிகளுகளுக்கு முரணாக கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் நான்காவது முறையாக அதிபர் பதவிக்கு மோராலஸ் போட்டியிட்டது பெரும் சர்ச்சையானது. இந்த தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தற்போது, பொலிவியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட 7 அமைச்சர்கள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here