‘இதோ..! நம்முடைய அழகான ப்ளூ மார்பிள்’ – வைரல் புகைப்படம்

0
78

பூமிக்கு அருகே இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமானது வலைதளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்டு பின்னூட்டமளித்து வருகின்றனர். விண்வெளி அமைப்புகள் , நாசா போன்றவை இது போன்ற விண்வெளியோடு சம்பந்தமான புகைப்படங்களை வெளியிடும். அத்தகைய புகைப்படங்களை ரசித்து போற்றி பலரும் பகிர்ந்து அந்த புகைப்படம் வைரல் ஆகும். அது போல விண்வெளி வீரர் டாக் ஹார்லி வெளியிட்டுள்ள இந்த புகைப்படமும் தற்போது வைரலாகிறது.

வலைதளத்தில் பல்லாயிரக்கணக்கானோரைப் பார்வையாளர்களைப் பெற்ற இந்த புகைப்படம் 2,300க்கும் மேல் முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. ‘இதோ..! நம்முடைய அழகான ப்ளூ மார்பிள்’ என கேப்ஷன் இடப்பட்டு இந்த புகைப்படத்தை விண்வெளி வீரர் டாக் ஹார்லி வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் பூமியின் பசுமையைத் தாண்டி கடலின் நீலநிற வண்ணத்தை ரசித்துக்கொண்டே இருக்கும் அளவு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை அழகை கொண்டுள்ள பூமியைக் காத்திடல் வேண்டியும் பின்னூட்டம் வருவது நல்ல சிந்தனை கொண்ட சமூகத்தை கட்டமைக்கிறது என்றே சொல்லலாம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here