இந்தியா மீது டிரம்ப் புகார்!

0
32

”உலகில் காற்று மாசு அதிகரிப்பதற்கு, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளே காரணம்,” என, அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்காவில், அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில், அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் நிறுத்தப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு, டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வடக்கு கரோலினாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், டிரம்ப் நேற்று பேசியதாவது:உலக அளவில் காற்று மாசு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தான் காரணம். காற்றில், அதிகமான அளவு மாசடைந்த வாயுக்களை, இந்த நாடுகள் தான் வெளியேற்றுகின்றன.

அமெரிக்காவைப் பொறுத்த வரை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், எரிசக்தியிலும் தன்னிறைவு அடைந்துள்ளது. பிளாஸ்டிக்குக்குப் பதிலாக, காகிதத்தை மாற்றுப் பொருளாக மாற்ற முடியும் என நான் நினைக்கவில்லை. குளிர்பானத்தை, ஸ்ட்ராவுக்குப் பதிலாக, காகிதத்தில் குடிக்க முடியுமா… அமெரிக்க வேலை, அமெரிக்க மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். இதற்கு எப்போதும் நான் முன்னுரிமை அளிப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here