கர்ப்பக்காலத்தில் 10,000 தேனீக்களுடன் விசித்திர போட்டோஷூட்..! – வைரல் புகைப்படங்கள்

0
180

பெத்தானியின் வினோதமான போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி தற்போது பேசுபொருளாக உள்ளது.

டெக்சாஸ் மாகணத்தை சேர்ந்த பெத்தானி கருலக்-பேக்கர் தனது வயிற்றில் 10,000 தேனீக்களுடன் நடத்திய போட்டோஷூட் வைரலாகி உள்ளது.

முதல் குழந்தையை ஈன்றெடுக்கும் தாய் தனது கர்ப்பக்கால நினைவுகளை போட்டோஷூட் எடுப்பது வழக்கம் தான். ஆனால் அது எந்த விதத்திலும் குழந்தைக்கு தீங்கா அமைந்து விடக்கூடாது.

டெக்சாஸ் மாகணத்தை சேர்ந்தவர் பெத்தானி. இவர் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். இதனால் தனது 10,000 தேனீக்களுடன் தனது கர்ப்பக்கால போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளார்.

மேலும் ராணி தேனீ எனது வயிற்றில் பிணைக்கப்பட்டுள்ளது. அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். இதை எனது மருத்துவரின் ஆலோசனைக்கு பின் தான் இதுப்போன்று போட்டோஷூட் நடத்தினேன் என்றுள்ளார்.

கடந்த முறை கருச்சிதைவு என்னை மிகவும் மனச்சோர்வுக்கு தள்ளியது. நான் பிறக்கப்போகிற எனது குழந்தை எண்ணி மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

ஆனால் பெத்தானியின் இந்த போட்டோஷூட் இணையத்தில் நேர்எதிர்மறையான கருத்துகளை பெற தொடங்கியுள்ளது.

தேனீ வளர்ப்பில் நீங்கள் கைத்தேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பல ஆயிரக்கணக்கான தேனீக்கள் நேரடியாக வயிற்றில் ஊர்ந்து பற்றி சிந்திக்க முடியவில்லை. குழந்தையின் ஆரோக்யம் மிகவும் முக்கியாமானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


தேனீ வளர்ப்பில் வல்லவராக இருந்தாலும் கர்ப்ப காலங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here