காவல்துறையை பெருமைப்படுத்தி படங்கள் இயக்கியதில் வேதனை! இயக்குநர் ஹரி

0
46

காவல்துறையைப் பெருமைப்படுத்தும் கதாநாயகர்களாக விக்ரம், சூர்யா நடித்த   சாமி, சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3  சாமி 2,  ஆகிய படங்களை எடுத்தது வேதனை அளிப்பதாக அறிக்கை வெளியிட்டு தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளர் இயக்குநர் ஹரி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்  தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு உலக தமிழர்களைத்தாண்டி பல்வேறுதரப்பினரும் நியாயம் கேட்டு வருகின்றனர். முக்கியமானதொன்று

மனித உரிமைகளை மீறிய காவலர்கள் அனைவர்  மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்களது குடும்பத்துக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.  இந்தியாவில் தேசிய அளவில் தற்போது இந்தச் சம்பவம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்ற நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் ஹரி காவல்துறை அதிகாரிகளாக நாயகர்களின் பாத்திரப்படைப்பை வைத்து ஐந்து திரைப்படங்களை எடுத்ததற்கு வேதனை அடைவதாக  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை தகவல் :

`சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரேவழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்தத் துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையைப் பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக இன்று மிகவும் வேதனைப்படுகிறேன்’

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here