குருவிக் குஞ்சுகளுக்கு தாயாக மாறிய நாய்! – வைரல் வீடியோ

0
107

இங்கிலாந்தில் உள்ள நாய் ஒன்று தாயை இழந்த குருவிக் குஞ்சுகளை அரவணைத்து நட்பு பாராட்டும் வீடியோ தற்போது இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

நார்ஃபோல்க் என்ற இடத்தில் ஜடேன் என்பவர் 5 வயதான ரூபி என்ற லேப்ரடார் வகை நாயை வளர்த்து வருகிறார்.

அவர் வீட்டுத் தோட்டத்தில் கூடு கட்டியிருந்த குருவி ஒன்று இறந்து விடவே, அவற்றின் குஞ்சுகள் தாயின்றி பரிதவித்து வந்தன. இதனால் இரக்கம் கொண்ட ஜடேன் அவற்றை தன் வீட்டில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரின் வளர்ப்பு நாயான ரூபியும் அந்தப் பறவைகளின் மீது அதீத அன்பு கொண்டு அவைகளுடன் நட்பு பாராட்டி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here