“கொரானா” – உதவும் உள்ளங்கள்

0
150

தமிழக குறுஞ்செய்திகள்!

1. திருத்தணியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. திருத்தணி தாலுகா, எஸ்.அக்ரஹாரம், நாராயணபுரம் மற்றும் நெமிலி ஆகிய கிராமங்களில், தெருக்கூத்து கலைஞர்க ள், 75க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், அரிசி, பருப்பு, காய்கறி போன்ற நிவாரண பொருட்கள் வழங்கும் விழா எஸ்.அக்ரஹாரம் மற்றும் நாராயணபுரத்தில் நடந்தது.

2. திருவள்ளூர் மாவட்டம் சத்தரை கிராமத்தில், அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தீஸ்வரி, உடன் பணிபுரியும், ஒன்பது ஆசிரியர்களின் பங்களிப்புடன், 1.70 லட்சம் ரூபாய் மதிப்பில், அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினர்.

3.திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 115 பேரின் குடும்பத்துக்கு, அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபால்
குடும்பத்துக்கு, தலா, 1,000 ரூபாய் வீதம், ஒரு லட்சத்து, 15 ஆயிரம் ரூபாயை நிவாரண உதவியாக, தனது சொந்த பணத்தில் வழங்கினார்.

4. திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே, வெங்கடாஜலபுரம் பஞ்சாயத்து தலைவரான பழனிசாமி, ஒரு ரூபாய் இட்லி கடையை திறந்து உள்ளார்.

ஊர் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், கிராமத்தில், 80 ஆண்டுகளாக, காமராஜர் பொது மன்றமாக இருந்த கட்டடத்தை, காமராஜர் மலிவு விலை உணவகமாக மாற்றியுள்ளார்.

5. அரியலுார், துாப்பாபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி, பள்ளியில் படிக்கும், 62 மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தலா, 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்க முடிவு செய்தார்.இதன்படி, ஒவ்வொரு மாணவர்களின் வீடுகளுக்கும் நேரில் சென்று, பெற்றோரிடம் பணத்தை வழங்கி, கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here