கொரோனா குறித்த டிரம்ப் பதிவை நீக்கிய பேஸ்புக் !

0
21

கொரோனா தொற்று தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆக., மாதம், பிரபல தனியார் தொலைக்காட்சியில், ‛​​குழந்தைகள் கொரோனாவிற்கு இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள். எனவே பள்ளிகளைத் திறப்பதால் அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகமாட்டார்கள்,’ என பேசிய வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்தார். டிரம்பின் கருத்து குறித்து மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பால் ஆதாரமில்லாத செய்தியைப் பகிர்ந்ததாக அவரின் பதிவை பேஸ்புக் நிறுவனம் நீக்கியது.
இந்நிலையில், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த டிரம்ப், மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு வெள்ளை மாளிகை திரும்பிய நிலையில், மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதால் பேஸ்புக் நிறுவனம் அப்பதிவை நீக்கியுள்ளது. அந்த பதிவு: தடுப்பூசி இருந்தபோதிலும், பருவ காய்ச்சிலில் சில நேரங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இறக்கின்றனர். அதற்காக நாட்டை மூடப் போகிறோமா? இல்லை., அதனுடன் வாழ கற்றுக்கொண்டோம். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து பேஸ்புக் நிறுவன விதிகளை மீறியதாகவும், கொரோனாவின் தீவிரம் குறித்த தவறான தகவல்கள் எனவும் கூறி அவரது பதிவு நீக்கியது. இதே கருத்தை டுவிட்டரிலும் டிரம்ப் பதிவிட்டிருந்தார். ஆனாலும் அவரது கருத்துக்கள் நீக்கப்படாமல், எச்சரிக்கை செய்தியுடன் தவறான கருத்து என்று மட்டும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here