சாத்தான்குளம் சம்பவம்: நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருப்போருக்கு வாழ்த்துக்கள் – கமல்ஹாசன்

0
162

நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருக்கும் நீதித்துறை நடுவர் மற்றும் சாட்சி சொன்ன பெண் காவலருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, ஜூன்19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இது குறித்து பலரும் விமர்சித்தும், ஆதங்கப்பட்டும் பதிவிட்டு வரும் வேளையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு கமல்ஹாசனும் பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசன் டுவிட்டர் :

“சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்றும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here