சீன அதிபருக்கு சவால்; உட்கட்சி பூசலா?

0
101

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உட்கட்சி பூசல் என தகவல்.

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே அந்நாட்டு அதிபருக்கு சவால்கள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் கடும் சவால்களை சந்தித்து வருவதாக கருதப்படுகிறது. கொரோனா விவகாரத்தை எதிர்கொள்வதிலும், பொருளாதாரம் மற்றும் சர்வதேச உறவுகளை கையாள்வதில் அவரது முயற்சிகள் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றன.

கொரோனாவுக்கு பிறகும் பொருளாதாரம் வலுவாக உள்ளது என்பதை காட்டுவதற்காகவும், சர்வதேச அரங்கில் எழுந்துள்ள பிரச்னைகளை எதிர்கொள்வதற்காகவுமே இந்தியா உடனான எல்லை விவகாரத்தை அவர் கையில் எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. ஆனாலும் ஷி ஜின்பிங்கின் நடவடிக்கைகள் அவருக்கு மேலும் நெருக்கடியையே ஏற்படுத்தியுள்ளதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே அவருக்கு சவால்கள் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here