244 வது சுதந்திர தினக் கொண்டாட்டம்!

0
120

அமெரிக்காவின் 244வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவின் கோரத்தாண்டவம் ஒருபுறமிருக்க, இனவெறிக்கு எதிரான போராட்டமும் கிளை பரப்பியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் 244வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, தேசிய நினைவிடம் அமைந்துள்ள மவுண்ட் ராஷ்மோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார். கொரோனா தொற்றுக்கு எதிராகக் களத்தில் போராடி வரும் பல மருத்துவர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

“சீனாவிலிருந்து வந்த பயங்கர தொற்று நோயிடம் இருந்து மிகப்பெரிய வெற்றியை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம்“  என பேச ஆரம்பித்தவர், அமெரிக்காவில் அண்மைக்காலமாக நடைபெறும் போராட்டங்கள் கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.

இனவெறிக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, அமெரிக்காவின் வரலாற்றை அழிக்க நினைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் முகக்கவசம் அணியாமல் பங்கேற்று இருந்தனர்.


பின்னர் வெள்ளை மாளிகைக்கு விமானம் மூலம் வந்த டிரம்ப், அங்கு நடைபெற்ற விழாவில் மனைவி மெலானியாவுடன் கலந்து கொண்டார். அப்போது, ராணுவ வீரர்கள் மற்றும் சேவை அமைப்புகளை கவுரவிக்கும் வகையில், போர் விமானங்கள் வானில் அணிவகுத்தன. இதை பார்த்து, அங்கிருந்த ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here