சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்!

0
540

மே மாதம் வெயில் மட்டுமல்ல; தேர்தல் பிரச்சாரமும் சுட்டெரிக்கும் காலம் ! தமிழகத்தில் வெயிலின் வெக்கை இவ்வாரத்திலிருந்தே தொடங்கிவிட்டது! தமிழகத்தில், பிரதமர் நரேந்திர மோடி அஇஅதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 06.03.2019 அன்று முறைப்படி தொடங்கி வைத்தார். அஇஅதிமுக, பாஜக, மருத்துவர் இராமதாஸின் பாமக இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து விட்ட நிலையில், நடிகர் விஜயகாந்தின்  தேமுதிக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாததால், அந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை ஆதலால் மிகவும் எதிர்பார்ப்புடன் நிறுவப்பட்டிருந்த விஜயகாந்த்        கட்-அவுட்கள் அவசர அவசரமாக அகற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ”வாரணாசி” நாடாளுமன்ற உறுப்பினரான நான், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவித்தார். அதாவது, இந்துக்களின் புனித பூமிகளாக கருதப்படும் வாரணாசி மற்றும் காஞ்சிபுரத்தை இணைத்து தமது பிரச்சாரத்தை மதவாதமாக ஆரம்பித்து வைத்தார். இதற்கு கூட்டத்தில் பங்கேற்ற அஇஅதிமுக, பாமக-வினர் பதில் சொல்லாதது, பொதுமக்களிடையே, சூரிய வெப்பத்தை விட வெப்பமூட்டுவதாக இருந்தது. கூடவே தமிழ்நாட்டில் 4 கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்படும் என்று அறிவித்ததன் மூலம், பிரதமர் இந்திப் பள்ளிகளை இம்மண்ணில் நடத்தொடங்கியுள்ளார். இதற்கும் அஇஅதிமுக, பாமக-வினர் பதில் சொல்லாதது, பொதுமக்களிடையே, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது! மேலும், ஒரே இந்தியா, ஒரே வரி(GST), ஒரே கல்வி(NEET), என, பாஜக தமது இந்து-இந்தி-இந்துஸ்தான், இலட்சியத்தில் உறுதியாக இருப்பது வருத்தம் தருவதாக உள்ளது என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

வரும் 13 ஆம் தேதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கன்னியாகுமரியில் தொடங்கவுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறப்புரை ஆற்றுகிறார், அவர் என்ன வெப்பத்தைக் கிளப்புவாரோ என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here