சொந்த காலில் நிற்கும்; சுயேட்சைகள்! (ஒரு விரல் புரட்சி)

0
1313

மனசாட்சி அற்ற மத்திய அரசு, ஆளுமை அற்ற ஆளும் கட்சி, ஏமாற்ற நினைக்கும் எதிர்க் கட்சி, இவற்றுக்கு மத்தியில் அப்பாவி பொதுமக்கள். இந்நிலை மாறாதா என்று ஏங்கி நிற்கும் இளைய சமுதாயம். ”இனி ஒரு விதி” செய்வோம் என்று எழுந்துள்ள சில சுயேட்சைகள் தான் இன்றைய தேர்தல் ஹீரோக்கள்.

யார் அவர்கள்?

அவர்களுக்கு என்ன கோவம் மத்திய மாநில அரசுகள் மீது? என்ன காரணம் சுயேட்சையாக நிற்பதற்கு, ?

கர்ணன், தங்க பாண்டியன் மற்றும் ரோஷி ஆகியோர் தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயட்சைகளாக போட்டியிடும் ஹீரோகள். மற்ற சுயேட்சைகளை காட்டிலும் இவர்கள் இடத்தில் அப்படி என்ன தனித்துவம் உள்ளது.

மத்திய சென்னை வேட்பாளர்:

சின்னச்சாமி சுவாமிநாதன் கர்ணன் அல்லது சி. எஸ். கர்ணன்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர். 1983-இல்  சென்னை சட்டக் கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பை முடித்தவர். பின்னர் சென்னை நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளை கவனித்துக் கொண்டிருந்தார்,  அதன் பின் சென்னை பெருநகரக் குடிநீர் வடிகால் துறையில் சட்ட ஆலோசகராகவும்,  தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின்  வழக்குகளை நடத்தி வந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள்  நீதிபதியாக பதவி வகித்தார். பின்னர்  கர்ணனை, இந்திய உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி மாறுதலாகிப் போனார்.

சி. எஸ். கர்ணன் இந்தியப் பிரதமர் அலுவலகம்,  இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் மனுக்களை அனுப்பினார். மேலும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை இந்தியப் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

கர்ணன் அவர்கள், கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, 6 மாத சிறைத்தண்டனைக்கு பிறகு, டிசம்பர் மாதம் விடுதலை ஆனார். பின்பு அதே  ஆண்டில், ‘ஊழலுக்கு எதிரான கட்சி’ என்ற, புதிய கட்சியை துவங்கினார். அரசு நிர்வாகத்திலும், நீதித்துறையிலும் உள்ள முறைகேடுகளை அம்பலப்படுத்துவதே தன் நோக்கம் என, அவர் தெரிவித்திருந்தார்.

மத்திய சென்னை லோக்சபா தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்துயுள்ள  நீதிபதி கர்ணன்,  தற்போது வாரணாசி தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, கர்ணன் அவர்கள், வேட்பு மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக மற்றும் அதிமுக இன்னும் தமிழகம் மற்றும் புதுச்சேரியை தாண்டாத நிலையில், அவர் கட்சி சார்பில் நாடு முழுவதும் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தன்னை தானே பிரதமர் வேட்பாளர் என்றும் அறிவித்துக்கொண்டார்.

தென்சென்னை வேட்பாளர் ரோஸி:

தென்சென்னை வேட்பாளரான ரோஸி சட்டம் படித்து கொண்டு இருகிறார் இவருக்கு வயது 29. புதுகோட்டை சேர்ந்த இவர் சமூகத்தின் மீதுள்ள அக்கரையில், இந்த சமூகத்தை மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த தேர்தலில் நிற்கிறார்.

இவர் பொதுவுடமை என்னும் இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளாராக இருகிறார். அந்த இயக்கத்திற்கு  ஆதரவாக இளைஞர்கள் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இவர் ஸ்டெர்லைட் போரட்டத்தில் பங்கேற்றுள்ளார்.  மற்ற அரசியல் கட்சி வேட்பாளர்கள் போன்று , மைக் பிடித்து வசனம் பேசி, ஆடலும் பாடலும் என வித்தைகள் காட்டமல், துண்டு சீட்டில் பிரச்சாரம் செய்கிறார்கள்.  மக்களும் இவர்களை கவனிக்க தொடங்கி உள்ளார்கள். பல கோரிகைகளும் இவர் முன் வைக்கப்பட்டு உள்ளது.

இவர்களின் முக்கிய கொள்கையாக தொழிலாளர்களுக்கு மேம்பட்ட வசதிகள் செய்ய வேண்டும் அதிலும் குறிப்பாக துப்புறவு தொழிலாளர்களின் நலன் மேம்பட வேண்டும், ஓய்வு ஊதியத் திட்டம் , குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் என பல திட்டங்கள் மற்றும் கொள்கைகளை முன் வைத்துள்ளார்.

விருதுநகரில் வேட்பாளர் எம்.தங்கபாண்டியன்;

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த எம் தங்கபாண்டியன், அவர் 13 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 35. சமூகத்தின் மீதுள்ள அக்கறையின் காரணமாக, சமூகத்தில் எதுவும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதா என்ற நோக்கத்துடன் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 504 வாக்குகள் வாங்கியுள்ளார்.

நிர்மலாதேவியின் வழக்கை முதல் முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ”சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தின் வாழ்வாதரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கான ஒரு வழிமுறையாக உள்ளது, இந்த தேர்தல்” என்று உறுதியுடன் நிற்கிறார் நாடாளுமன்ற தேர்தலில்.

இவர்கள் மற்றவர்களை போல் பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை தனது முகநூலின் பக்கம் கொண்டு இளைஞர்களை விழிக்கசெய்து அவர்கள் மூலம் தான் பெற்றோர்களை மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்துடன். தந்து கோரிக்கைகள் வாக்கு உறுதிகளை இளைஞர்கள் மூலமாக கொண்டு செல்கிறார்.

கர்ணன், தங்கபாண்டியன், ரோஸி ஆகிய மூன்று பேரும் ஒருவருக்கு ஒருவர் தொடர் இல்லை, ஆனால் அவர்களினின் கொள்கைகள் மற்றும் கோரிகைகள் ஒன்று தான். நீதிபதியே நீதிக்காக தேர்தல் நிக்கிறார், ஆண்கள் செய்ய மறந்ததை ஒரு பெண்ணாக செய்ய துடிக்கும் ரோஸி, பெண்கள் மற்றும் தனது சொந்த ஊரை காப்பற்ற நினைக்கும் தங்கபாண்டியன் இவர்கள் மூவரும் நாம் வீட்டில் ஒருவர் போல் தான் வாழ்ந்து கொண்டு இருகிறார். இந்த சமூகத்தால் எதோ ஒரு காரணத்தால் துக்கி ஏறியப்பட்ட பட்டு மரம் தான் இவர்கள். இவர்கள் நினைப்பது நம் பட்ட துன்பதை இனி என் மக்கள் பட கூடாது என்பதற்காக தான், இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்கள், ”இனி ஒரு விதி செய்யவோம்” என ஒரு விரல் புரட்சியாளர்களான சுயேட்சை வேட்பாளர்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here