ஜெயலலிதா மரணம்: யார் குற்றவாளி?

0
202

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளில் மாற்றுக்கருத்துகள் இருந்தால், இறுதி அறிக்கை வெளியான பின் அதனை, எதிர்த்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நீதிமன்றத்தில் வாதிடலாம் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்  தெரிவித்துள்ளது.

விசாரணை ஆணையத்தில் நடைபெற்று வரும் விசாரணைனின் போக்கு, அப்போலோ மருத்துமனைக்கு எதிராக உள்ளது. எனவே அதன் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என அம்மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்ட ஆணைய வழக்கறிஞர் எ.ஆர்.எல். சுந்தரேசன், ”ஆணைய விசாரணையத்தின் பணி என்பது, ஜெயலலிதாவின் மரணம் குறித்த களஆய்வு மட்டும் தான்; இதன் கருத்துகளை மாநில அரசோ, புலனாய்வு அமைப்போ ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டயாம் இல்லை” என்றார். ஆகவே விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளில் மாற்றுக்கருத்துகள் இருந்தால், இறுதி அறிக்கை வெளியான பின் அதனை, எதிர்த்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நீதிமன்றத்தில் வாதிடலாம் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்  தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here