தமிழக அரசு பணி வயது உச்ச வரம்பு அதிகரிப்பு

0
19

தமிழக அரசு துறையில், நேரடியாக பணி நியமனம் செய்யப்படும் பணிகளில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் ஆகியோருக்கு, வயது உச்ச வரம்பு, 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், சில பணிகளுக்கு, நேரடியாக நியமனம் நடக்கிறது. இந்தப் பணிகளில் சேர, குறைந்தபட்ச பொது கல்வித் தகுதியாக, 10ம் வகுப்புக்கு கூடுதலான கல்வி இருக்கக் கூடாது.அதேபோல, இப்பணியில் சேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் ஆகியோருக்கு, வயது உச்ச வரம்பு, 30 ஆக இருந்தது.

தற்போது, வயது உச்ச வரம்பை, 32 ஆக உயர்த்தி, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை, அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த அரசாணை வெளியிட்டதற்காக, தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பு தலைவர் சேம.நாராயணன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here