தமிழக துணைமுதல்வரின் தம்பிக்கு கொரோனா தொற்று எப்படி?

0
55

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் நகராட்சி ஏற்கனவே முழுமையான கட்டுபாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது. எனினும், தேனி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாவட்டத்தில் இதுவரை 575 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவி வரும் இந்நிலையில், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தேனி மாவட்ட ஆவின் தலைவரும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ. ராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மதுரையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் கட்டுப்பாட்டிலுள்ள விடுதி ஒன்றின் தனிமை முகாமில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கார் ஓட்டுனர் மூலமாக அவருக்கு தோற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here