திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் பட்டியல் வெளியீடு

0
25

தேர்வு முடிவுகளில் குளறுபடி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், செப்டம்பர், 13 மற்றும் அக்., 14ல், நீட் தேர்வு நடந்தது. நாடு முழுவதும், 13.66 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில், 99 ஆயிரத்து, 610 பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., நேற்று(அக்.,16) வெளியிட்டது. இதில், 7.71 லட்சம் பேர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்வு முடிவுகளில் குளறுபடி உள்ளதாக சர்ச்சை எழுந்தது. தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிகம் பேர் தேர்ச்சி, மாநில தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது போன்ற புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் திருத்தப்பட்ட பட்டியலை தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.பட்டியலில் தமிழகத்திற்கு கீழே இருந்த 5 மாநிலங்களின் புள்ளிவிவரத்தில் ஏற்பட்ட தவறு சரி செய்யப்பட்டுள்ளது. திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, உத்தரகாண்ட் மாநில தேர்வு பகுப்பாய்வு மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. நீட் தேர்வு பகுப்பாய்வு பட்டியலில் மாநிலங்களின் விவரம் இடம் மாறியதால், ஏற்பட்ட பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
தமிழகம் 5வது இடம்
நாட்டிலேயே நீட் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியலில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 99,610 மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 57.4 சதவீதம் ஆகும்.உத்தர பிரதேச மாநிலத்தில88,889 பேர் தேர்ச்சி பெற்றதால், அந்த மாநிலம், பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here