நண்பர்கள் தின ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

0
90

 

‘உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்று நட்புக்கு இலக்கணமாகத் திகழும் நண்பர்களைப் போற்றும் சிறந்த நாள் இன்று. வருடந்தோறும் நண்பர்களைப் போற்றும் விதமாக ஆகஸ்ட் மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இரத்தப்பந்தங்களை விட நண்பன் என்ற ஒரே காரணத்துக்காக உயிரைக் கூடக் கொடுக்கும் நண்பர்கள் பலர் உள்ளனர். பெற்றோரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியாததையும் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும். நம் அவசர தேவைகளுக்குக் கை கொடுக்கும் ஒருவர் நம் நண்பர் தான். பிரதிபலன் பாராமல் உதவி செய்வார்கள் நண்பர்கள்.

மகாபாரதத்தில் துரியோதனனிடம் நட்புக் கொண்டான் கர்ணன். அந்த நட்புக்காகத் தன்னுயிரையும் கொடுத்தான் கர்ணன். உன் நண்பன் யாரென்று சொல் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பார்கள் அதுபோல நம்முடைய நண்பர்களை வைத்தே நம் குணத்தைக் கணிப்பர். நண்பர்கள் இருந்தால் கவலைகள மறக்கும். மனம் மகிழும்.

ஆபத்தில் உதவுபவனே உயிருக்கு உற்ற நண்பன் என்பார்கள். நமக்குத் துணையாக எல்லா விஷயங்களிலும் நிற்பவர்கள் அவர்கள்.நல்ல நண்பர்கள் நமக்குக் கிடைப்பது வரம். அத்தகைய நண்பர்களை இந்நன்னாளில் போற்றிப் பாதுகாப்போம். அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

-எழுத்தாளர் உமா

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here