நான்காவது முறையாக “ஆஸ்கர் விருது” ஒத்திவைப்பு

0
124

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் உலக சினிமா ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அறிவித்துள்ளது.

ஆஸ்கர் விருது :
அகாடெமி விருதுகள் என அழைக்கப்படும் இந்த விருது நிகழ்ச்சி 1929 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த அகாடெமி விருதில் வழங்கப்படும் பிரத்தேக தங்கச் சிலையை முதன்முதலில் வடிவமைத்தவர் ஜார்ஜ் ஸ்டான்லி. 13.5 இன்ச் உயரமுள்ள (34.3 செ மீ) இந்த சிலையானது 3.856 கிலோ எடை கொண்டது.

நுழைவுத்தேதி மாற்றம் :
கொரோனா தாக்குதல் அதிகரித்ததால் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. போட்டி நுழைவுக்கான தகுதி காலமும் 2020 டிசம்பர் இறுதி முதல் 2021 பிப்ரவரி இறுதி வரை இரண்டு மாதங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சில அதிரடி விதிமுறை மாற்றம்:
2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 28 அன்று நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகம் முழுக்க கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, என்றாலும் கூட ஆஸ்கர் விருதுக்கு விண்ணபிக்கும் படங்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது ஆஸ்கர் அமைப்பு. அதன்படி அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் படங்களும் ஆஸ்கர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் இந்த வருடம் வெளியான படங்களுக்கு மட்டும் இது பொருந்தும். இந்த மாற்றம் நிரந்தரமானது அல்ல.

முதல் முறை அல்ல நான்காவது முறை மாற்றம்:
ஆஸ்கர் வரலாற்றில் நான்காவது முறையாக இதுபோல நடந்துள்ளது. 1938-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் வெள்ளம் வந்ததால் ஆஸ்கர் விழா முதல்முறையாக ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த முப்பதாவது ஆண்டுகளில் 1968-ல் மார்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலை காரணமாகவும் அதன் பிறகு 1981-ல் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் சுடப்பட்டபோதும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது நான்காவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here