நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

0
14

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று (அக்.,16) வெளியிடப்பட்டன.

மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 3 ஆயிரத்து 862 மையங்களில் நடந்த இந்த தேர்வுக்கு, 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 13 லட்சத்து 67 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர். இத்தேர்வுக்கான விடைக்குறிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டன. விடைக்குறிப்புகளை சரி பார்த்து அதில் ஏதேனும் மாறுதல் இருந்தால் தகவல் தெரிவிக்க தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை அவகாசம் வழங்கியிருந்தது.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள், இன்று (அக்.,16) மாலை 5: 30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமையின் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here