நீதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது – காவலர் மிரட்டல்

0
93

நீதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது – காவலர் மிரட்டல்

இந்திய தேசிய அளவில் பேசப்பட்ட , தமிழகத்தின் சாத்தான் குளம் காவல்துறை தாக்குதலால் உயிரிழந்தவர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீஸ் இரவு முழுவதும் லத்தியால் தாக்கப்பட்டு இருப்பது உறுதியாகும் விதமாக நீதித்துறை நடுவர் பாரதிதாசனின் அறிக்கை தெரிவிக்கிறது.விசாரணை நடந்த போது காவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமையும் அவர்களின் ஒழுங்கீனம் குறித்தும் அதில் தெரிவித்துள்ளார்.


தந்தை மகன் காவல்துறையினரால் அடித்து அதன் பின் கோவில்பட்டி கிளைச்சிறையில் இறந்த சம்பவம் கொலைக்கானது என்று கூறப்படும் சூழலில் அதனைக் குறித்த விசாரனையை கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் மேற்கொண்டு, அதன் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, சாத்தான் குளக் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் விசாரனைக்கு முழு ஒத்துழைப்பினை அளிக்கவில்லை,முதுகுக்குப் பின்னால் தன்னை இழிவாக பேசியதாகவும், மிரட்டும் தோணியிலும் நடந்துகொண்டார்கள்.

அதன் பின் இந்த விசாரணையின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களை தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்திருந்தார்.

காவல் அதிகாரிகளை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என காவலர் மகாராஜன் அவதூறாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மூன்று காவலர்களையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில், கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதியை அவதூறாக பேசிய காவலர் மகாராஜன் பணி இடை நீக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here