”புதையுண்ட தமிழர் புதையல்” !!

0
2430

”தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும் – இவள்

என்று பிறந்தவள் என்றறி யாத

இயல்பினளாம் எங்கள் தாய்!”

-என்று தமிழ்த்தாய்க்கு ஆரம் சூட்டுகிறார் பாரதி!

அந்த அளவுக்கு பழமையானது தமிழ்மொழி!

பழமையானதுதான் என்றாலும், இளமையானது!

அதனால் தான், மனோன்மணியம் சுந்தரனார், தமது தமிழ்த்தாய் வாழ்த்தில்

“ஆரியம் போல் வழக்கொழிந்து- சிதையா உன்

சீரிளமைத் திறம் வியந்து வாழ்த்துதுமே!” என்கிறார்.

சமஸ்கிருதம் போல், வெறும் எழுத்து மொழியாக-

பூசை,புனஸ்கார மொழியாக-

பேசும் வழக்கொழிந்து போகாமல் –

தமிழ்மொழி, இன்றும் நிலைத்து நிற்கிறதென்றால், நம் தமிழ்மொழியில் படைக்கப்பட்ட இலக்கியங்களால்  தான்!

தமிழில் பேசும் மக்களால்தான்!

மக்களோடும் அவர்தம் வாழ்வோடும், தமிழும் கலந்து வளர்வதால் தான்!

தமிழ் நாட்டில் தோன்றிய தமிழ்அரசுகள், தமிழ்ப் பல்கலைக் கழகங்களைத் தோற்றுவித்தன; தமிழாராய்ச்சிகள் நடத்தின; உலகத்  தமிழ் மாநாடுகள் கொண்டாடின.

தமிழர்கள், தமிழைத் தம் மூச்சாய் சுவாசிப்பதால்தான் இந்த நூற்றாண்டுவரையிலும் இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ், அறிவியல்  தமிழ், கணினித் தமிழ், டிஜிட்டல் தமிழ் என, புதுப்புது வடிவெடுத்து வாழ்த்துகொண்டிருக்கிறது!

அதிலும் “செம்மொழி” எனும் அங்கீகாரத்தை மத்திய அரசிடம் நாம் கோரிப் பெற்றதையடுத்து, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் “தமிழ் இருக்கை” உருவானது!

அதேபோல, உலகின் பிற பகுதிகளிலும் இருக்கைகள் உண்டாக்கிட, உலகத் தமிழர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் – கீழடியில் கூட தமிழர் வரலாறு கிடைத்துள்ளது. “கீழடி தொல்லியல் களம்” என்பது  இந்தியத் தொல்லியல் அய்வு நிறுவனத்தால் அகழாய்வு  செய்யப்பட்டு வரும், ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத்  தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவங்கை மாவட்டள்ள கிழடி கிராமத்தின் பள்ளிச்சந்தை திடல் மேட்டுப்பகுதியில் உள்ளது கீழடி.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விட ”,கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு” வரையான காலப்பகுதியைச் சேர்ந்த வசிப்பிடமாக கணிக்கப்பட்டது. உறுதிப்படுத்தல்களுக்காக, இந்த அகழ்வாயில் இருந்து இரண்டு மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய அனுப்பட்டது. சூலை 2017 இல் வெளிவந்த இதன் முடிவுகள், இந்த மையம் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்னையது என்பதை உறுதிசெய்துள்ளன.

அங்கு கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரிய வந்துள்ளது.

கதிரியக்கக்கார்பன் காலக்கணிப்பு  என்றால் என்ன??

கதிரியக்கக்கார்பன் காலக்கணிப்பு பணி

கதிரியக்கக்கார்பன் காலக்கணிப்பு  இயற்கையில் காணப்படும்,  கரிமம் -14 என்னும் கரிமத்தின் ஓரிடத்தானைப் பயன்படுத்திக் கரிமம் கார்பன் கலந்த பொருட்களின் வயதைக் கண்டுபிடிப்பதற்கான கதிரியக்க அளவைமுறை ஆகும். இம்முறையைப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான பொருட்களின் வயதை அறிந்துகொள்ள முடியும்  பொதுவாக இதன் மூலம் கணிக்கப்படும் வயது, தற்காலத்துக்கு முந்திய (Before Present (BP)) கதிரியக்கக்கரிம ஆண்டுகளில் தரப்படுகின்றது

தமிழின் –தமிழர்களின் –நீண்ட வரலாற்றை நமக்கு தெரிவிக்கும் வகையில், கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி, நமது நாகரிகத்தின் தொன்மையை எடுத்து காட்டுகின்றது.

கண்டுபிடிப்புகள்

  • தமிழி எழுத்து
  • கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள்
  • செங்கற் சுவர்கள்
  • கூரை ஓடுகள்
  • மண்பாண்டங்கள்
  • மிளிர்கல் அணிகலன்கள்
  • எலும்புக் கருவிகள்
  • இரும்பு வேல்

கூடுதலாக சென்னைக்கு அருகே, பூண்டியில் அகழ்வாராய்ச்சி நடத்திய “ராபர்ட் புரூஸ்ஃபுட்” எனும் தொல்லியல் அறிஞர் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாங்களைக் கண்டறிந்துள்ளார்.

அவர்கள் தமிழர்களாகத்தானே இருக்க வேண்டும்!!

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

முன்தோன்றி மூத்த குடி”- என்பது தமிழர்களின் நியாயமான பெருமை தான்!

வாழ்க தமிழ்!

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here