மறக்க முடியாத கலாம்!!

0
59

மறக்க முடியாத கலாம்

கடைக்கோடித் தமிழகத்தில் மீனவக் குடும்பத்தில் பிறந்து நாட்டின் சிறந்தக் குடிமகனாகவும் அறிவியல் துறையில் சாதனைப் படைத்த ஏவுகணை நாயகன் திரு.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று. இளைஞர்களே கனவு காணுங்கள் நீங்கள் நினைத்தால் நம நாட்டைச் சிறந்த நாடாக உருவாக்கலாம் என்று அவர்களிடம் நம்பிக்கையை விதைத்தவர்.தன்னிகரில்லாத தலைவர்.

இந்தியாவின் பதினோறாவது ஜனாதிபதியாவார். இாமநாதபுரத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து அரசுப்பள்ளியில் படித்து பெரிய விஞ்ஞானியாகி நம் நாட்டிற்கே புகழைத் தேடித் தந்தவர். வறுமையின் காரணமாகப் படிக்கும் போதே வேலைக்குச் சென்றார். விண்வெளிப் படிப்பைத் தேர்வு செய்து நாட்டின் சிறந்த விஞ்ஞானியாக விளங்கினார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றாலும் தமக்குக் கீழ் வேலைச் செய்பவரையும் மதித்து அவருடையக் கருத்துக்களையும் கேட்டறிவார். தன் பணத்தைத் தான் மற்றவர்களுக்குச் செலவிடுவாரே தவிர ஜனாதிபதி என்பதற்காக அரசுப்பணத்தை எடுத்துச் செலவு செய்யவில்லை. இளைஞர்களுக்குப் பாடம் நடத்துவதில் அவருக்குக் கொள்ளைப் பிரியம்.

உறங்கச் செய்வது கனவல்ல நம்மை உறங்கவிடாமல் செய்வதே கனவு எனவும் கனவு காணுங்கள் என்று பள்ளி மாணாக்கர்களையும் வருங்கால சந்ததியினரான இளைஞர்களிடமும் கூறினார். ஒரு செயல் செய்யும் போது பதட்டப்படாமல் முழு ஈடுபாட்டுடன் செய்தால் வெற்றி நிச்சயம் என்று கூறினார். அதுமட்டுமின்றி கனவு காணுங்கள் உங்கள் கனவுகளை நோக்கிப் பயணியுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மாணவர்களிடையே நேரம் செலவிடுவது அவருக்குப் பிடித்தமான ஒன்று. 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் நாள் ஷில்லாங்கில் மாநாட்டில் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் உயிர் பிரிந்தது. அவருடைய எளிமையான வாழ்க்கையும் இனிமையான தோற்றமும் யாராலும் மறக்க முடியாது.  அவரின் நினைவோடு நினைவு  நாளில் நாமும் நம் கனவுகளை விரித்து சிறகடிக்க முயல்வோம்.

– எழுத்தாளர் உமா

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here