முதியவர்களுக்கு அடுத்து இளைஞர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

0
71

அமெரிக்காவில் ,முதியவர்கள் கொரானா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இளைஞர்களுக்கும் அதிக அளவில் தொற்றுக்கு உள்ளாக்கப்படுவார்களோ என்ற அச்சத்தை போக்கும் விதமாக அமெரிக்க சென்டர் பார் டிஸீஸ் கண்ட்ரோல் (சிடிசி)

அமைப்பின் சிடிசி இயக்குனர் ராபர்ட் ரெட்பீல்டு பேட்டி அளித்துள்ளார்.

சி.டி.சி இயக்குனர் பேட்டி:

கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் 30 வயதுக்குக்கீழ் உள்ள இளைஞர்களை தாக்கத் தொடங்கியுள்ளது. இவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் வைரஸ் தாக்கத்திலிருந்து விரைவில் குணம் அடைந்து விடுவார். இதனால் இறப்பு விகிதமும் கணிசமாகக் குறையும் வாய்ப்புள்ளது.
அதேபோல் டயாலிசிஸ் மேற்கொள்வோர், சிறுநீரக செயலிழப்பு, இருதய கோளாறு, சர்க்கரை நோய், புற்றுநோய், அல்சைமர் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் தாக்கப்பட்டவர்களை கொரோனா எளிதில் பாதிக்கும். இந்த நோய்கள் அற்ற இளைஞர்கள் கொரோனா தாக்கத்தில் இருந்து விரைவில் குணமடைந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு இல்லாத ஆரோக்கியமான நுரையீரல்கள் கொண்ட இளைஞர்கள் மற்றவர்களைவிட வெகு விரைவில் குணமடைந்து விடுகின்றனர். எனவே இளைஞர்கள் கொரோனாவால் தாக்கப்படும்போது அதிகம் பயப்படத் தேவையில்லை.

இந்த பேட்டியின் மூலம் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கப்பகுதி வாழ் மக்கள் சற்று ஆறுதல் அடையலாம். கொரோனாவை எதிர்கொள்ள மன தைரியத்தை மட்டும் தன்னம்பிக்கையை வரவைத்து இரண்டு வாரங்கள் தனிமையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here