வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை : 2020 ஆம் ஆண்டுத் தமிழ்விழா

0
175

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FETNA)  2020 ஆம் ஆண்டுத் தமிழ்விழா மூன்று நாள் விழாவாக  ஜூலை 3,4,5 ஆகிய தேதிகளில் இணையத்தின் வழியே நடைபெற உள்ளது.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை:
பலதமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் ஒன்றாய் இணைந்து இந்தப் பேரவையை தமிழின் தமிழரின் அடையாளங்களைப் போற்றி வருகிறது. அதனோடு ஒருவருக்கொருவர் உதவிடும் வகையிலும் அமைந்துள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பேரவையின் இந்த ஆண்டு நிகழ்ச்சிகளை இணையத்தின் வாயிலாக  https://fetnaconvention.org என்ற இணையதளத்தில் காணலாம்.

முதல்நாள் நிகழ்ச்சி (ஜூலை 3):

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படும், அதனைத் தொடர்ந்து திருக்குறள் ஓதுதல், சிறப்புச் சொற்பொழிவுகள், கவியரங்கம் , தொழில்முனைவோர் கூட்டம் போன்றவை திட்டமிடப்பட்டுள்ளது.
“நிறவெறி களைவோம் ! மனிதநேயம் காப்போம் !” என்ற தலைப்பில் நடக்க உள்ளதும்  கவிக்கோ. ஞானசெல்வன் நடுவராக நிகழ்த்த உள்ள கவியரங்கம் உட்பட , நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார் மேகலா ராமமூர்த்தி.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி (ஜூலை 4):
சிறப்பு சொற்பொழிவுகள், மக்களிசை, இசைத்தமிழ் வர்மக்கலை,  இளையோர் கலந்துரையாடல், திரைப்படக்கலைஞர்கள் நிகழ்ச்சி, பட்டிமன்றம் என இரண்டாம் நாள் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சை மாரிமுத்து மக்களிசைக்குழு வழங்கும் நிகழ்ச்சியில் நாகராசு கருப்பையா, ரங்கராஜன் பேச்சிமுத்து, செல்வி சேகர், போன்ற கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.  இசைத்தமிழ் ஆய்வர் சமர்ப்பா குமரன் வழங்கும் இசைத்தமிழ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சச்சிதானந்தன் வெங்கடேசன் மேற்கண்ட  நிகழ்ச்சிகளை  ஒருங்கிணைக்க உள்ளார்.

சமூக ஊடகங்களே இன்று பெரும்பாலும் நம் வாழ்வியலோடு இருப்பதை உணர்ந்த குழுவினர்,  ‘சமூக ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான தாக்கம் யாரிடம் அதிகம்?’ என்ற கேள்வியை எழுப்பி ஆண்களிடமா ? பெண்களிடமா என பட்டிமன்ற பேச்சாளர்கள் புலவர் ராமலிங்கம், கவிதா ஜவகர் பேச உள்ளதை ஆராய்ந்து தீர்ப்பு வழங்க உள்ளார் இந்த பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் ராமச்சந்திரன்.  இந்த நிகழ்ச்சியை  விஜி அழகர் ஒருங்கிணைக்கிறார்.

மூன்றாம் நாள் நிகழ்ச்சி (ஜூலை 5):

மரபுக்கலை , உலகத்தமிழர்கள் விழிப்புணர்வு, மெல்லிசை நிகழ்ச்சி, தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள், என நடைபெற்று நன்றியுரையுடன் பேரவை நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது.  இணைய வழியில் நடக்கும் பேரவையின் மூன்று நாள்  2020 தமிழ்விழா நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவைத் தலைவர் சுந்தர் குப்புசாமி.

நிகழ்ச்சிக்கு வணக்கம் அமெரிக்கா செய்திக்குழுவனரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

– செய்திக்குழு

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here