வெட்டுக்கிளிகளின் நடமாட்டம் கண்காணிக்க ஒரு ”மொபைல் ஆப்”

0
73

கென்யாவில் வெட்டுக்கிளிகளின் நடமாட்டத்தை ஒரு mobile app மூலம் அந்நாட்டு விவசாயத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தாண்டு அதிகரித்துள்ளதால், அவற்றை அழிக்க முடிவெடுத்த அந்நாட்டு விவசாயத்துறை அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் E-Locusts என்ற மொபைல் application-ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன்மூலம், பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஊர்க்காவல்படையினர், கூட்டமாகத் திரியும் வெட்டுக்கிளிகளை படம் பிடித்து, அவை அடுத்து செல்லும் திசையை இந்த app-ல் பதிவேற்றம் செய்கின்றனர்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில், வெட்டுக்கிளிகளின் வருகையை முன் கூட்டியே கணிக்கும் விவசாயத் துறை அதிகாரிகள், அவற்றை அழிக்க பூச்சிக்கொல்லிகளுடன் தயாராகி விடுகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here