ஸ்ரீ கிருஷ்ண ஜெய்ந்தி கொண்டாட்டம் இரண்டு நாள் இந்தியாவில் ! எதனால்?

0
113

இறை வழிபாட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களில் இந்தியர்கள் சிறப்பு மிக்கவர்கள் என்றே சொல்லலாம்.  விரும்பிய மனதோடு வேண்டிய செயல்கள் நடந்திட எண்ணற்ற தெய்வ வழிபாட்டு முறைகளை பின்பற்றுவதிலும் ஒரு மகத்துவம் இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட இறைவனில் ஒருவராக கருதப்படும் ஸ்ரீமகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணர் அவதாரம்.  கிருஷ்ணர் பிறந்த இந்த நாளை கோகுலாஷ்டமி என்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி எனவும் இந்தியர்கள் வழிபடுகின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த கிருஷ்ண அவதார நிகழ்வினை இந்த நாளில் நாம் நினைத்து மகிழ்வது சிறப்பே.

தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாக கருதி இந்த கோகுலாஷ்டமியைக் கொண்டாடுவர். அதன் அடிப்படையில் இன்று 11.08.2020 தமிழகத்திலும் நாளை 12.08.2020 வட இந்தியாவிலும் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படுகிறது.  காலை 7.55 மணிக்கு ஆரம்பமாகும் அஷ்டமி திதி மறு நாள் காலை 9.35 க்கு முடிவடைகிறது  என்பதால்.  இரணு நாளிலும் காணப்படும் அஷ்டமிதியை வைத்துக் கொண்டாட காரணம் உண்டு. தமிழ் மக்களைப் பொறுத்தவரை கிருஷ்ணர் காலையில் தான் பிறந்தார் என்பதும், வட இந்தியர்களைப் பொறுத்த வரை கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்பதும் ஐதீகமாக உள்ளது.

எப்போது பூஜை செய்யலாம்?

எமகண்டம், குளிகை, ராகு காலம் போன்ற நேரங்களைத் தவிர்த்து விட்டு ஏனைய அனைத்து நேரங்களில் எப்போது வேண்டுமாலும் பூஜைகள் செய்யலாம். அதிலும் நல்ல நேரம், கௌரி நல்ல நேரம் உகந்ததாக கருதப்படுகிறது.

வெண்ணைய் திருடன் என்று செல்லமாக அழைக்கப்படும் கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணையுடன் , வீட்டில் செய்ய முடியுமான அளவு இனிப்பு பலகாரங்களை பூஜையில் வைக்கலாம்.  பலகாரம் செய்ய இயலாவிடிலும் அவலையும் வெண்ணையையும் கூட வைக்கலாம். ஒரு பொழுது, உண்ணா விரதம் இருந்தும் மன நிம்மதியோடு வழிபாட்டினை நடத்தலாம்.

வீட்டில் உள்ள சின்னஞ்சிறு பிஞ்சுக்குழந்தைகலை மாவுக்கோலில் பாதம் பதித்து, வீட்டின் துவக்கத்தில் இருந்து பூஜை அறை வரை பதிந்து வைக்கலாம். அது நம் வீட்டுக் குழந்தைகளே கிருஷ்ணராக நம் வீட்டிற்குள் வந்தார் என்ற மனமகிழ்வினை கூடுதலாக ஏற்படுத்தும்.

எந்த பண்டிகையானாலும் மதநல்லிணக்கத்தோடு கொண்டாடி மகிழும் தருணமே சிறந்தது . அத்தகைய வாய்ப்புகளை அக்கம்பக்கம் குடும்பத்தினரோடு கொண்டாடி மகிழும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம் அமெரிக்காவின் சார்பாக ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!!

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here