அமெரிக்காவின் சிகாகோ நகரில் 46 ஆயிரம் தமிழ் பெயர்களை கொண்ட நூல் வெளியீடு!

0
111

அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாகாணத்தில்  நடைபெற்ற  ”பெட்னா”   பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ”தமிழியக்கம்” பதிப்பித்த தமிழ் பெயர்களின்  நூலை தொல்லியல் துறை மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர்  மாஃபா. க. பாண்டியராஜன் அவர்கள்  வெளியிட்டார்.

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு:

                                 ”யாதும் ஊரே யாவரும் கேளீர்”

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலம் போய்! இன்று தமிழை  எட்டில் இருந்து கணினி வரை உலக அளவில் தமிழை வளர்த்து கொண்டு இருகிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவில் பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு , அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32-வது  தமிழ் விழா, மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா   ஆகியவை  அமெரிக்காவின்  சிகாகோ  மாநகரில்  மிகச்சிறப்பாக நடந்து வருகிறது.

” பெயர் சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்” :

சிகாகோவில் 32-வது  தமிழ் விழா நான்கு நாட்களுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நான்கு நாள் நிகழ்ச்சியில் இரண்டாம் நாள் அன்று வி.ஐ.டி  வேந்தர் மற்றும் தமிழியக்கத்தின் தலைவர் திரு.கோ.விசுவநாதன் அவர்களின் சீரிய முயற்சியில் உருவாகியுள்ள சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்”  என்ற நூல்  வெளியிடப்பட்டது.

46000 தனித்தமிழ் பெயர்களைக்  கொண்ட இந்த நூலை  வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் திருமதி.பவள சங்கரி ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகவும் , புலவர் வே.பதுமனார் அவர்கள் பதிப்பாசிரியராகவும் பங்காற்றி மிகச்செம்மையாக வெளிவந்துள்ளது.

இந்த நூலை   “தமிழ் வளர்ச்சித்துறை மற்றும்  தொல்லியல்துறை”  அமைச்சர் திரு.  மாஃபா  பாண்டியராஜன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை வட  அமெரிக்கத் தமிழ்ச்ச்சங்கப் பேரவை (பெட்னா) தலைவர் திரு.சுந்தர் குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் , தொழிலதிபர் திரு.பால் பாண்டியன் , ஹார்வார்ட் தமிழ் இருக்கை  மருத்துவர்  சு. சம்பந்தம் , வி.ஐ.டி. துணைத்தலைவர் திரு.கோ.வி.செல்வம் , செய்தி வாசிப்பாளர் திருமதி.நிர்மலா பெரியசாமி, எழுத்தாளர் திரு.லேனா தமிழ்வாணன். மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.விடியல் சேகர் ,   வாசிங்டன் வட்டாரத் தமிழ்சங்கத்தின் முன்னாள்  தலைவர்  சிவா உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் பேசிய தமிழியக்கத்தின் தலைவர் டாக்டர்  கோ.விசுவநாதன் அவர்கள்:

இன்றைய இளம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதைவிட பிறமொழி பெயர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகவும் கவலையளிக்கும் செயலாகும்.  ஒருவரது  பெயர் என்பது அந்த மனிதனின் பொருள் பொதிந்த அவனது தனித்துவமான அடையாளமாகும். பிறமொழியில் பொருளற்ற பெயர்களை வைப்பது அடையாளத்தை தொலைத்து நிற்கும் நிலையை ஏற்படுத்துகிறது. எனவே இந்த அவலத்தை போக்க இந்நூல் பெரிதும் உதவும்  என்று குறிப்பிட்டார்.

நூலின் தொகுப்பாளர் திரு ச.பார்த்தசாரதி தெரிவிப்பது:

நிகழ்ச்சியில் பேசிய நூலில் தொகுப்பாளர் ச.பார்த்தசாரதி குறிப்பிடுகையில், ”ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு இனத்தின் வரலாறு அவர்களின் பெயரிலிருந்து தொடங்குகிறது”.  உலகின் வேறு எந்த இனமும் தனக்கு சிறிதும் தொடர்பில்லாத, பொருள் தெரியாத ஒரு சொல்லை தன்  பெயராக வைப்பதில்லை.  தமிழர்கள் குறிப்பாக கடந்த பதினைந்து இருப்பது ஆண்டுகளில் இந்த அவலம் இளம் பெற்றோர்களை நாகரீகம் என்ற பெயரில் வாயில் நுழையாத , பொருளற்ற , பிறமொழி பெயர்களை வைக்கும் நிலை உள்ளது.

சங்க இலக்கியங்களிலிருந்தும் , நம் பண்பாட்டை எடுத்தியம்பும் ஒரு நல்ல தமிழ் பெயரை நம் பிள்ளைக்கு சூட்ட இந்த நூல் பெரிதும் பயனளிக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் திருக்குறள் போன்று ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் , தமிழ் நூலகங்களிலும் இருக்கவேண்டிய நூல் இது என்று குறிப்பிட்டார்.

விழாவை தொகுப்பாசிரியர்  .பார்த்தசாரதி நெறிப்படுத்தினார். விழா ஆயத்தப்பணிகளை  தமிழியக்கத்தின் மாநிலச்  செயலாளர் மு. சுகுமார்  மேற்கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here