அருவியில் விழுந்த குட்டியைக் காப்பாற்ற முயன்று 6 யானைகள் அடுத்தடுத்து அருவியில் விழுந்து உயிரிழந்த சம்பவம்

0
175

தாய்லாந்தில் அருவியில் விழுந்த குட்டியைக் காப்பாற்ற முயன்று 6 யானைகள் அடுத்தடுத்து அருவியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 6 யானைகள் அடுத்தடுத்து அருவியில் விழுந்து உயிரிழந்த சம்பவம்:

தெற்கு தாய்லாந்து பகுதியில் காவோ யாய் தேசியப் பூங்காவில் ஹெல்ஸ் என்ற பெயரில் கட்டாட்று நீர்வீழ்ச்சி உள்ளது. இதனை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து அங்கு வந்த யானைக் குடும்பம் ஒன்று உலவிக் கொண்டிருந்தது.

அப்போது கூட்டத்தில் இருந்த குட்டியானை ஒன்று திடீரெனத் தவறி அருவியில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது. இதனைக் கண்ட மற்ற யானைகள் அதனைக் காப்பாற்ற முயன்றன. இதில் அடுத்தடுத்து 5 யானைகள் அருவியில் இருந்து விழுந்தும், பாறைகளில் மோதியும் உயிரிழந்தன.

இந்தக் கூட்டத்தில் இருந்த 2 யானைகள் மட்டும் என்னசெய்வதன்று அறியாமலும், இறந்து கிடந்த தங்கள் குடும்பத்தினரைக் கண்டும் கண்ணீர் வடித்தபடி நின்ற காட்சிகள் மீட்புப் பணிக்குச் சென்ற வனத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here