இந்தியாவில் ஒரு வயதில் தொலைந்த குழந்தை 21ம் வயதில் அமெரிக்காவில் கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்

0
235

சென்னை புளியந்தோப்பில் ஒரு வயதில் தொலைந்த ஆண் குழந்தை தனது 21ம் வயதில் பெற்றோரை சந்திக்க அமெரிக்காவில் இருந்து வந்த சம்பவம் நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

புளியந்தோப்பில்  தொலைந்து போனா சுபாஷ்:

புளியந்தோப்பு நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ், பெயின்டர். இவரது மனைவி சிவகாமி. இவர்களது இளைய மகன் சுபாஷ் 1999ல் 1 வயதில் காணாமல் போனார். காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டும் சுபாஷ் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2006ல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.

அமெரிக்காவில் கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்:

விசாரணைக்கு பின்னர், அமெரிக்க தம்பதி திருவேற்காட்டில் இயங்கிய காப்பகத்தில் சுபாஷை தத்தெடுத்து அவினாஷ்’ என்ற பெயரில் வளர்த்து வந்தனர். இதையடுத்து 2013ல் சுபாஷின் (டி.என்..) பரிசோதனையில் சுபாஷ், ராகேஸ்வர ராவ் சிவகாமி தம்பதியின் மகன் என்பது உறுதியானது.

இதையடுத்து பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின் 8ம் தேதி அவினாஷ் வளர்ப்பு பெற்றோர் உதவியுடன் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தார். இங்கு தன் பெற்றோர் மற்றும் சகோதரி சரளா 27, சகோதரர் லோகேஷ் 24 ஆகியோரை சந்தித்தார்.

இது குறித்து நாகேஷ்வர ராவ் கூறியதாவது:

சுபாஷ் பேசும் ஆங்கிலம் எங்களுக்கு புரியவில்லை. இன்னொருவர் உதவியுடன் தான் புரிந்து கொள்கிறோம். என் மகனை அவனது வளர்ப்பு பெற்றோரிடம் இருந்து பிரிக்க விரும்பவில்லை. அவர் நாளை அமெரிக்கா செல்ல இருக்கிறார், என்றார்.

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here