தெற்கு கொரியாவில் சேற்றில் விளையாடும் வினோதமான திருவிழா

0
248

தெற்கு கொரியாவில்  சற்று வித்தியசமான விளையாட்டாக சேற்றில் விளையாடும்  விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டை அந்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

சேற்றில் விளையாடும் திருவிழா:

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள போரியாங் நகரத்தில் ஆண்டு தோறும் சேற்றுத் திருவிழா நடைபெறும். அந்தவகையில் இங்கு தற்போது 22வது ஆண்டு சேற்று திருவிழா நடைபெற்று வருகிறது.

ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய இந்த திருவிழா 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் சேற்றில் மல்யுத்தம் , சேற்று நீரை ஒருவர் மீது ஒருவர் வீசுவது என பல நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் கலந்துகொள்ளவும், திருவிழாவை கண்டுகளிக்கவும் நாடு முழுவதிலும் இருந்து பலர் போரியாங்கிற்கு வந்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here