சாகசம் நிறைந்த விளையாட்டு

0
185

சீனாவில் அமைந்துள்ள உலகின் மிகவும் அபாயகரமான , திகில் ஏற்படுத்தும் மலைப்பாதையில் செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சீனாவின் திகில் ஊட்டும் மலை:

சீனாவில் உள்ள உலகின் மிக அபாயகரமான மலைப்பாதையில் சுற்றுலா செல்ல ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். காரணம் பல சவால்கள் மற்றும் சாகசங்கள் நிறைந்த மலை சீனாவில் அமைந்துள்ளது.

மலையின் அமைப்பு:

சீனாவில் ஷான்ஷி (Shaanxi) என்ற இடத்தில் உள்ள ஹவ்ஷான் (Huashan) மலைப்பகுதியில் ஒருவர் மட்டுமே நடந்து செல்லும் வகையில் மரத்தினால் ஆன ஒற்றையடிப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

7 ஆயிரத்து 70 அடி உயரத்தில் பிரமாண்டமான பாறையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதையில் பாதுகாப்பு உபகரணங்களுடன் நடந்து சென்றாலும் கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் இந்த திகில் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது.

இந்த மலைப்பாதையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பாறையில் படிக்கட்டுக்கள் செதுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியிலும் ஓர் ஆச்சரியம். தற்போது கோடை காலம் என்பதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஹவ்ஷான் மலைக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here