மனைவியை சுமந்தபடி ஓடும் விநோத ஓட்டப்போட்டி!!

0
201

பின்லாந்து நாட்டில் மனைவியை தலைகீழாக சுமந்தபடி ஓடும் விநோத ஓட்டப்போட்டி நடைபெற்றது.

விநோத ஓட்டப்போட்டி:

மனைவியை சுமந்தபடி ஓடும் விநோத ஓட்டப்போட்டி பின்லாந்து நாட்டில் 1992ம் ஆண்டு தொடங்கி ஆண்டு தோறும் இந்த விநோத போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் தங்களது மனைவியை, முதுகில் தலைகீழாக சுமந்தபடி இடையில் வைக்கப்பட்டுள்ள தடைகளை தாண்டி இலக்கை அடைவதே போட்டியின் விதிமுறையாகும்.

இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்ற போட்டியில் ஏராளமான தம்பதியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதில் லித்துவேனியா நாட்டை சேர்ந்த வைடாடாஸ் கிர்கிலியாஸ் மற்றும் அவரது மனைவி நெரிங்கா கிர்கிலியாஸ் தம்பதியினர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

இதே போட்டியில் 6 முறை வெற்றி பெற்ற முந்தைய சாம்பியனான, டைய்ஸ்டோ மியாட்டினென் (Taisto Miettinen) இணையரை, தற்போதைய புதிய வெற்றியாளர்களான கிர்கிலியாஸ் இணையர் வெறும் 6 விநாடிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here