மியான்மர் நாட்டில் தொடர் கனமழை மற்றும் மண்சரிவில் இதுவரை சுமார் 56 பேர் உயிரிழந்துள்ளனர்

0
240

மியான்மர் நாட்டில் தொடர் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

மியான்மர் நாட்டில் தொடரும் கனமழை:

அந்நாட்டில் பெய்து வரும்  தொடர் கனமழை காரணமாக பல்வேறு ஊர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாகாணத்தின் மலைப்பகுதியில் உள்ள தாப்யோ கோன் கிராமத்தில் பெய்த கனமழையால் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து 28 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், 22 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மேலும் 34 உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

ஐ.நா தெரிவிப்பது:

மியான்மர்  நாட்டில் தொடர் மழையினால், வெள்ளத்தால் வீடுகளை இழந்த12,000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும், முகாம்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை 38,000-க்கும் அதிகமாக உள்ளதாகவும் ஐ.நா.தெரிவித்துள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here