சீனாவின் ஹூவேய் செய்து கொண்ட 5ஜி ஒப்பந்தத்தில் இருந்து ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள் வெளியேற முடிவு?

0
231

சீனாவின் ஹூவேய் நிறுவனத்துடன் செய்து கொண்ட  5ஜி தொழில்நுட்ப சேவைக்காக ஒப்பந்தத்தில் இருந்து ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள் வெளியேறக் கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் குற்றசாட்டு:

அமெரிக்கா  ஹூவேய் நிறுவனத்தின் உபகரணங்களை சீனா தனது உளவு வேலைகளுக்கு பயன்படுத்துவதாக எச்சரித்தது. மேலும் ஹூவேயின் பொருட்களை அமெரிக்கா தடையும் செய்தது.

பிற நாடுகளும் தடை செய்யக் கேட்டுக் கொண்டது. 5ஜி தொழில்நுட்பத்தை முழு வீச்சில் முன்னெடுக்க இந்தியா தயாராகி வரும் நிலையில், ஹூவேய் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனை, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஆகிய நிறுவனங்கள், பெரும்பாலான பகுதிகளில் தங்களது 2ஜி, 3 ஜி, 4ஜி சேவைகளை வழங்க ஹூவேய் மற்றும் ZTE நிறுவனத்தின் உபகரணங்களைப் பயன்படுத்தி வருகின்றன.

ரிலையன்ஸ் ஜியோவின் நிலைப்பாடு:

ரிலையன்ஸ் ஜியோவானது, 4ஜி சேவைக்கு தென் கொரியாவின் சாம்சங்கை சார்ந்துள்ளது. அடுத்ததாக 5ஜி தொழில்நுட்பம் வரவுள்ள நிலையில், அதில் ஹூவேய்க்கு எந்த அளவுக்கு இடம் கொடுப்பது என்பது தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.

உளவுப் புகார் காரணமாக, பயனர்களின் தகவல் பரிமாற்றம் தொடர்பான சேவையில் ஹூவேய்க்கு பங்கு இருக்கக் கூடாது என்று தொலைதொடர்பு நிறுவனங்கள் கருதுகின்றன. எதிர்காலத்தில், சீன உபகரணங்களுக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் இது சிக்கலை அதிகரிக்கக் கூடும் என்றும் அவை நினைக்கின்றன.

எனவே ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களது 5ஜி சேவைக்கு நோக்கியாவையும், எரிக்சனையும், ஜியோ நிறுவனம் சாம்சங்கையும் நாடக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here