சீனாவில் குச்சிகளை கொண்டு பழங்கால வடிவமைப்பில் உருவான கட்டிடம்!

0
76

சீனாவில், குச்சிகளை கொண்டு பழங்கால வடிவமைப்பில் உருவான கட்டிடம் ஒன்றை உருவாக்கிய கைவினை கலைஞருக்கு வலைதளத்தில் பாராட்டு குவிந்து வருகிறது.

சீனா நாட்டின் ஃபூஜியான் மாகாணத்துக்கு உட்பட்ட புட்டியன்(putian) நகரில், வசிக்கும் கைவினை கலைஞர் சென் ஜின்ஜீ (Chen Jinjie) என்பவர், குச்சிகளை கலைநுணுக்கத்துடன் செதுக்கி இந்த கட்டிடத்தை வடிவமைத்துள்ளார்.

பழங்கால வடிவமைப்பு:

இந்த பழங்கால கட்டிடம் சுமார் 1.3 மீட்டர் நீளம் மற்றும் 45 சென்டிமீட்டர் உயரத்துக்கு, இரு தளங்களுடன் நுண்கலை திறனுடன் சென் வடிவமைத்த இந்த கட்டிடம் பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. இந்த கட்டிடத்தின் சிறப்பு அம்சமே, கலைப்பொருளை நிஜமான கட்டிடமமாக காண்பிக்க அவர் அமைத்திருந்த படிக்கட்டு, அறைகள், பால்கனிகள் தான்.

அக்கட்டிடத்துக்கு குய்ஷான்யுன்ஜூ(Qiushanyunju ) என்று பெயரிட்டு சென், வெளியிட்டிருந்த வீடியோவை பார்த்த பலரும், வெறும் குச்சி மற்றும் பசை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கலைப்பொருளை, எவ்வளவு விலைக்கொடுத்தும் வாங்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here