குடியரசு தின அணிவகுப்பில்! காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் கெத்து காட்டிய தமிழ்நாடு!

0
46

                தலைநகர் டெல்லியில் 71ஆவது குடியரசு தினவிழாவில் 90 நிமிடங்கள் நடைபெற்ற அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் காவல் தெய்வமாக கருதப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்பட்டது. இந்த காட்சியினை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சிறப்பு விருந்தினர்:

நாடு முழுவதும் 71ஆவது  குடியரசு தினவிழா  கோலகலமாக கொண்டாடப்பட்டது . இதையொட்டி, டெல்லியில் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதத்துடன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ண கொடியை ஏற்றினார். நடப்பாண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் போல்சனாரோ கலந்து கொண்டுள்ளார்.

முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி:

முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆயுதங்கள், விமானங்கள் ஆகியவையும் அணிவகுப்பில் கலந்து கொண்டன. இவற்றை குடியரசு தலைவர் வீர வணக்கம் செலுத்தி ஏற்றுக் கொண்டார்.

விமானப்படைக்கு புதிதாக வாங்கப்பட்ட ரபேல் போர் விமானம், சினூக் மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஆகியன முதல் முறையாக காட்சிபடுத்தப்பட்டன. ருத்ரா, துருவ் போன்ற அதிநவீன ஹெலிகாப்டர்களும் இடம்பெற்றன. டிஆர்டிஓ சார்பில் எதிரிகளின் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கக் கூடிய ஷக்தி ஏவுகணையும் அணிவகுப்பில் இடம்பெற்றது.

தமிழகத்தின் அய்யனார் சிலை:

ராணுவத்தில் பெண்களின் ஆற்றல் மற்றும் ஆளுமையை பறைசாற்றும் வகையில் முதல் முறையாக சிஆர்பிஎப் மகளிர் பிரிவினர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தனர். மொத்தம் 90 நிமிடங்கள் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுத்து வந்தன. அந்த வகையில், தமிழகத்தின் சார்பில் காவல் தெய்வமாக கருதப்படும்  அய்யனார் காட்சிப்படுத்தப்பட்டது. தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனம் என அணிவகுத்து வந்த தமிழக ஊர்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here