பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை: ஈராக் அரசு விதித்தது

0
284

சிறுவர்கள் முதல் இளைஞர் இளைஞியர் வரை,கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பெரும்பாலும் கையில் செல்போன்களை வைத்துக்கொண்டு ஆன்லைன் விளையாட்டுகளிலேயே மூழ்கியிருப்பார்கள். குறிப்பாக,பப்ஜி விளையாட்டு அவர்களை பாடாய்ப்படுத்தி வருகிறது.

இப்படி,இளைஞர்கள் பப்ஜி போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளதால் அவற்றுக்கு  தடை விதிக்க வேண்டும் என ஈராக் நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமையன்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்ற ஈராக் அரசு, சில ஆன்லைன் விளையாட்டுகள் சமூகத்துக்கு தீங்கு விளைவிப்பதாலும், விளையாடுபவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாலும் , குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாலும், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலும், அவற்றுக்குத் தடைவிதிப்பதாக அறிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here