நெஞ்சம் துடிதுடிக்கும் : இலங்கை குண்டு வெடிப்பு!

0
146

இயேசுபிரான் உயிர்த்த ஈஸ்டர்  தினமான நேற்று உயிர்கள் சிதைந்தன. இதற்கு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் தான் காரணம்.  யார் இவர்கள்?  இவர்களுக்கு என்ன வேணும்? ரத்தத்தின் வாசம் ,  இவர்களுக்கு சந்தன வாசம் போல் இருகின்றதா?.  சாத்தானின் குழந்தைகளா இவர்கள் ?  ஏன்  இந்தக் கோபம்? யார்மேல் இவர்களுக்கு  இந்த வெறுப்பு?

பலியான அப்பாவி மக்கள், பிஞ்சுக் குழந்தைகள், தாய்மார்கள் பெண்கள் இவர்கள் முகத்தில் இருந்த புன்னகை எல்லாம் அழிக்க இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது?

ஏன் இந்தக் கொலைவெறி?  இதயத்தோடு இறைவனை அடையும் ஈஸ்டர் நாளில்,  இதயமே இல்லாதவர்கள் நடத்திய செயலில் பல இதயங்கள் நொறுங்கின.

குண்டுவெடிப்பு நடக்கவிருந்த போகிறது என்று புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தும் ஏன் இந்த அலட்சியம்? அரசாங்கத்தின் அலட்சியத்தால் பல அப்பாவி மக்கள் மண்ணோடு மண்ணாக மாண்டு போயினர்.

இலங்கையில் கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயம், நீர்க்கொழும்பு, கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், சங்ககிரில்லா நட்சத்திர ஹோட்டலின் மூன்றாவது மாடி, கிங்ஸ்பெரி நட்சத்திர ஓட்டல் தெஹிவளை மற்றும் தென்மட்டை கொடை ஆகிய 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளார்கள்.500 க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள்.

மேலும் 27க்கு மேற்பட்டவர்கள் வெளிநாட்டவர் , இதில் 5 பேர் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஷ்மி,நாராயண் சந்திரசேகர், ரமேஷ், ரஜினா,ஹானுமந்திராயப்பா, ரங்கப்பா ஆகியோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

  1. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு அங்கு நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் இது என கருதப்படுகிறது.

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரான்சில் உள்ள உலக அதிசயங்களுள் ஒன்றான ஈபிள் டவரின் ஒளி, நள்ளிரவில் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகு,  அங்கு இருந்த ஏசு சிலைமீது ரத்தம் தெளித்து இருந்த புகைப்படத்தை பார்க்கும் போது நெஞ்சம் துடிக்கிறது.

இந்த குண்டுவெடிப்புக்கு திலீப் பெர்னாண்டோ மற்றும் அவர் குடும்பத்தினர் உயிர்தப்பி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் பிரதமர் தெரசா மே உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

                           ”இனி விடியும் பூமி அமைதிக்காக விடியட்டும்”  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here