பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்பு, அமைச்சரவையில் 2 இந்தியர்கள்

0
204

பிரிட்டன்  நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பேர் இடம்பெற்றுள்ளார்கள்.

பிரதமர் பதவியில் இருந்து விலகிய தெரசா மே:

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்ததை நிறைவேற்ற முடியாததல் பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனை பொருத்தவரை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரே பிரதமர் பதவியிலும் அமர வைக்கப்படுவார்.

அதன்படி கன்சேர்வேட்டிவ் கட்சி தலைவர்  பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் போரிஸ்ஜான்சன் அமோக வெற்றி பெற்று பிரதமராக தேர்வானார். இந்த நிலையில் பக்கிங்ஹாம் அரண்மையில் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து, தெரசா மே முறைப்படி ராஜினாமா கடிதம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமராக பதவியேற்க ராணி எலிசத்பெத், போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுத்ததை ஏற்று, புதிய பிரதமராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி:

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற புதிய பிரக்சிட் ஒப்பந்தம் சிறப்பான முறையில் அக்டோபர் 31 ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என்று போரிஸ் ஜான்சன் உறுதி அளித்தார். இந்நிலையில் போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக  பதவியேற்ற போரிஸ் ஜான்சன் :

புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றுக் கொண்டார். பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி எலிசபெத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முன்னதாக ராணியைச் சந்திக்க போரிஸ் ஜான்சன் செல்லும் வழியில் பருவநிலை மாற்றத்தை முதலில் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டக்காரர்கள் ஜான்சனின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

போரிஸ் ஜான்சன்:

போரிஸ் ஜான்சன் நியூயார்க் நகரில் பிறந்து, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். பின்னர் வார இதழ் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார். 2001 முதல் 2008 வரை எம்.பி.யாகவும், தொடர்ந்து 2016 வரை லண்டன் நகர மேயராகவும் பணியாற்றி வந்த போரிஸ் ஜான்சன், 2 ஆண்டுகள் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நெருங்கிய நண்பரான போரிஸ் ஜான்சன், அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்:

போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி பட்டேல் மற்றும் அலோக் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரீத்தி பட்டேலுக்கு மிக முக்கியத்துறையான உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here