20 ஆண்டுகள் நீரில் மூழ்கிய புத்தர் மீண்டும் காட்சியளிக்கிறார்

0
72

தாய்லாந்தில், பசாக் சோன்லாஸிட் அணையின் நீர் மட்டம் சரிந்ததால், 20 ஆண்டுகளுக்கு முன் அணையில் மூழ்கிய புத்தர் கோவில் தற்போது அந்நாட்டு  காட்சியளிக்கிறது.

தாய்லாந்தில்  உள்ள லோப்புரி மாகாணத்தில், இந்த அணையின் நீரை பயன்படுத்தி சுற்றுபுற 4 மாகாணங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில், அண்மையில் இந்த அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து, நீர் தேக்க பகுதியில் மூழ்கியிருந்த புத்தர் கோவில் மற்றும் அதனை சுற்றியிருந்த 700 வீடுகள் வெளியே தெரிந்தன.

நீர்த்தேக்கம் 3% க்கும் குறைவாக எட்டியுள்ள நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு அணை கட்டும் போது நீரில் மூழ்கிய நவீன கோயிலான வாட் நோங் புவா யாயின் எச்சங்கள் வறண்ட நிலத்தின் நடுவில் தெரிகின்றது.

இதனைக்கண்ட புத்த துறவிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர், தலையின்றி சிதிலமடைந்திருந்த புத்தர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, வழிபட்டனர்.கடந்த 2015ம் ஆண்டு, அணையின் நீர் மட்டம் இதேபோல் வெகுவாக குறைந்தபோது, இந்த கோவில் வெளியே தெரிந்ததாக அணை அருகே வசிக்கும் சிலர் தெரிவித்தனர்.

960 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த அணை பொதுவாக நான்கு மாகாணங்களில் 1.3 மில்லியன் ஏக்கர் (526,000 ஹெக்டேர்) விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்கிறது, ஆனால் வறட்சி ஒரே மாகாணமான லோபூரியில் 3,000 ஏக்கர் (1,214 ஹெக்டேர்) வரை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here