தைவானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின

0
170

தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹூலியன் நகரின் கடற்கரையோர பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 புள்ளி பூஜ்ஜியமாக நில அதிர்வு பதிவானதாகவும், யீலான்(Yilan) நகரில் 22 கிலோ மீட்டர் ஆழத்துக்கு நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் கட்டிடங்கள் குலுங்கியது மட்டுமல்லாமல், வீடு மற்றும் ஓட்டலில் எரிவாயு மற்றும் நீர் கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில கட்டிடங்கள் சிதிலமடைந்தன.

இதனிடையே அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அதிகாரிகள் தற்காலிகமாக மின் இணைப்புகளை துண்டிக்கப்பட்டதோடு, தைவானின் வடக்கு பகுதிகளில் ரயில் சேவையையும் தற்காலிகமாக நிறுத்தினர்.

உள்ளூர் தொலைக்காட்சி  காட்சியில் பள்ளி குழந்தைகளை கட்டிடங்களிலிருந்து வெளியேற்றுவதைக் காட்டியது, அதே நேரத்தில் வியாழக்கிழமை நிலநடுக்கம் இந்த ஆண்டு இதுவரை தீவைத் தாக்கியதில் மிகப் பெரியது என்று வானிலை பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here