உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக சதியா! : விசாரணைக்கு உத்தரவு

0
300

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராகப் பின்னப்பட்டுள்ள சதிவலை குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ,தமக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தந்தார் என அவரது அலுவலகப் பெண் ஊழியர் ஒருவர் புகார் அளித்தார். அதன் மீது  உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக பாலியல் வழக்கு தொடர்வதற்கு,  தம்மிடம் 1.5 கோடி ரூபாய்  பேரம் பேசப்பட்டது என ஒரு வழக்கறிஞர் புகார் தெரிவித்தார். அவர் கூறிய புகாரைத் தாமே முன்வந்து, உச்சநீதிமன்றம் ஒரு வழக்காக எடுத்துக்கொண்டது. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்  அளித்த ஆவணங்களையும்  பெற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம்,  தலைமை நீதிபதிக்கு எதிராகப் பின்னப்பட்டுள்ள சதிவலை குறித்து, நீதிபதி ஏ.கே. பட்நாயக் தலைமையிலான ஒருநபர் குழு விசாரிக்கும் என்று உத்தரவு பிறப்பித்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here